புலவி - கலவி
குறள் வரிசை
குறள்:1302
உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்.
குறள் விளக்கம்:

பிணக்கம், உணவுக்குச் சுவைதரும் உப்புப் போன்றது; அதனை அளவுக்குமேல் அதிகரித்தல், உணவில் உப்புச் சிறிது மிகுந்தது போலாகும்.

குறள்: 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லாத வழி.
குறள் விளக்கம்:

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?.